முக்கிய செய்திகள்

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில்,

அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

இதையடுத்து சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பரிசு தொகையை செலுத்தலாமல்,

மக்களை காக்க வைப்பது ஏன் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.