திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
முன்னதாக பாத்திமாபுதூரில் உள்ள சுஜித்தின் கல்லறையில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்பு சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்