முக்கிய செய்திகள்

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

மிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 மேலும் தொழிசாலைகள் மற்றும் வீட்டுகளின் மேல் கூறைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

 திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களிலும் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, இரும்பேடு, சேவூர், இராட்டினமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் திடீர் மழை பெய்தது. 

பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்த திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.