முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த இரு நாட்களாக 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அடுத்த 48 மணி நேரத்தில் குறையுமென்றும், 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் குறையுமென்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை ஒட்டிய வங்க கடலின் வடமேற்கு திசையில் காற்றழுத்தம் காணப்படுவதாகவும்,

இது உள்தமிழகம் வரை பரவும் என்பதாலும் அடுத்த இரு நாட்களில் வெப்பம் குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.