கொரோன வைரஸை விட அது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளே வெகு வேகமாக பரவி வருகிறது
சீனாவில் மக்களை கொன்றுக் குவித்து வந்த கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி தற்போது இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா, பிரிட்டன் என சுமார் 150 நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.
வைரஸ் ஒரு புறம் இருந்தாலும், அது தொடர்பான மருத்துவ வழிமுறைகள் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீப காலங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களை குறிப்பிட்டு வைரஸ் தொற்று இருப்பதாக கூறி வதந்தி பரப்பியதாக தமிழகத்தின் நாமக்கல், பூவிருந்தவல்லி பகுதிகளில் பலர் கைது செஇந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் நிலையில் நாளை (மார்ச் 22) காலை 7 மணி முதல் 9 மணிவரை மத்திய அரசு சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதற்கும் பல்வேறு வதந்திகள், கட்டுக்கதைகள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், “சீனா, இத்தாலி, ஸ்பெயினை அடுத்து கொரோனாவின் நான்காவது அலை நாளை இந்தியாவை தாக்கவுள்ளது. அது, சூரியனில் இருந்து வரவுள்ளதாலேயே இந்த ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. ஏனெனில், நாளைய சூரிய ஒளியில் மக்கள் உலாவினால் கொரோனா தொற்று ஏற்படும். ஆகையால் அதனை தடுக்கவே இந்த 144 போடப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் தங்கள்மேல் சூரிய ஒளி படாதவகையில் வீட்டிலேயே இருக்கவேண்டும்.” என குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் லதா மேடம் என்பவர் பேசும் ஆடியோ ஒன்று உலா வருகிறது.
நாளைய ஊரடங்கு என்பது, மக்கள் வீட்டுக்குள் இருப்பதன் மூலம் கொரானா பரவலை தடுப்பதற்கான முன்னோட்ட முயற்சி என்றே பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து வரும் நிலையில் இது போன்ற ஆதாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. கூடுமானவரையில் இது போன்ற வதந்திகள் நிறைந்த தகவல்களை பகிராமல் இருப்பதே நலம்.