முக்கிய செய்திகள்

சுனந்தா புஷ்கா் மரண வழக்கு சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..


சுனந்தா புஷ்கா் மரணம் தொடா்பான வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவா் சசி தரூா். இவரது மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள பிரபல தனியா் ஓட்டலில் உயிாிழந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

சுனந்தா புஷ்கரின் மரணம் பெரும் சா்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவரது உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்க நிறுவனம் வழங்கிய அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சுனந்தா புஷ்கா் வயிற்றுப்பகுதியில் விஷம் இருப்பதை உறுதி செய்தது.

இந்த வழக்கில் சுனந்தா உயிாிழப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னா் அவா் தனது கணவா் சசிதரூருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளாா்.

அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், மரணிக்க விரும்பவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

இந்த வழக்கில் சசிதரூா் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோாி சசிதரூா் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில் சசிதரூருக்கு ஜாமீன் வழங்க விசாரணைக்குழு கடும் எதிா்ப்பு தொிவித்தது.

மேலும் அவா் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாகவும் தொிவிக்கப்பட்டது.

விசாரணை அதிகாாிகளின் கருத்தை நிராகரித்த நீதிபதிகள் சசிதரூருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினா். நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது,

சாட்சியங்களை களைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், 1 லட்சம் ரூபாய் பிணையப் பத்திரத்தை தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளனா்.