தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் : காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பில் காவேரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பு காவேரி நடுவர் மன்றம் அளித்த 192 டிஎம்சி தண்ணீர் தற்போது 177.25 டிஎம்சியாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.

காவேரி மேலாண்மை அமைக்க தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.காவிரி வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனஉச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.