ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை சிறப்பான தரமான சம்பவங்களுடன் தொடங்கியது.
என்னதால் அணியின் ஸ்கோர் 10-ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் (9 ரன்கள்) ஆட்டமிழந்திருந்தாலும் பிறகு வந்த வீரர்கள் பெரிதளவில் சோபித்தனர்.
புஜாரா 193 ரன்கள் எடுத்திருந்தபோது லயானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவற விட்டார்.
இவரது சிஷ்யர்களான அகர்வால் 77 ரன்களும், ரிஷாப் பண்ட் 159* ரன்களும்,
ரவீந்திர ஜடேஜா 81 ரன்களும், விஹாரி 42 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் மூச்சு வாங்கி நின்றனர்.
இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்யும் முடிவை மேற்கொண்டார் கேப்டன் விராட்கோலி.
ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் லயான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3-ஆம் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது.
நடப்பு டெஸ்ட் தொடரில் 2-1 என்ற வெற்றிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருப்பதால்,
4-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் சாதனை முனைப்புடன் காத்திருக்கின்றனர் கோலி&கோ கம்பெனியினர்.