முக்கிய செய்திகள்

சிட்னி டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை 177/2; அகர்வால், புஜாரா அரை சதம்…

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.

நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

டெஸ்ட் போட்டியில் அகர்வால், புஜாரா அரை சதம் பூர்த்தி செய்துள்ளனர்.

இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும்.

மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது.

இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.

இதில், ராகுல் 9 (6) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராகுலுடன், புஜாரா கைகோர்த்து விளையாடினார்.

இதில் அகர்வால் அரைசதம் 77 (112) அடித்து ஆட்டமிழந்துள்ளார். புஜாராவும் அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் கேப்டன் கோலி 23 (59) ரன்களில் வெளியேறினார். 55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 187/3 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 70 (146), ரஹானே 1(7) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.