பள்ளி மீது குண்டுமழை பொழிந்த சிரியா : 16 குழந்தைகள் உயிரிழப்பு..


சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் அமைந்துள்ள பள்ளி மீது, அரசுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அதிபா் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளா்ச்சியாளா்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப் போர் தொடா்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் கிழக்கு கவுட்டாவில், சிரியா – ரஷ்யா கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் அமைந்துள்ள பள்ளி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குலில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கவுட்டாவின் அர்பின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 வாரங்களில் சிரியா மற்றும் ரஷ்யா இணைந்து நடத்திய விமானத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


 

நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்…

இந்தியத் தேர்தலில் தலையிட்டால் ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை பாயும்: மத்திய அரசு எச்சரிக்கை…

Recent Posts