சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி..

சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா பாதிப்போல் பொது முடக்கம் அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராசுவை பெப்சி குழு சந்தித்து சின்னத்திரை படிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்படிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

படப்படிப்பு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர ஊரக பகுதிகள், வீட்டினுள், அரங்கத்தினுள் படப்படிப்பு நடத்த வேண்டும்.

20 பேருக்கு மேல் படப்படிப்பு தளங்களில் இருக்க கூடாது. சிருமி நாசினி தெளிக்க வேண்டும் . நடிகர்,நடிகைகள் படப்படிப்பு தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

அது போல் பிற கலைஞர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

அடிக்கடி உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நகரங்களில் மாநகாராட்சி அலுவலகத்திலும்,ஊரகப்பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அனுமதி பெற வலியுறுத்தியுள்ளது.

மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு

தமிழக அரசு தொடர்ந்த பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு..

Recent Posts