டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு : ஐசிசி அறிவிப்பு…

கரோனா தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது.

ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

ஐசிசி டி20 உலக கோப்பை 2021-ல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ந்தேதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்வு

கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..

Recent Posts