தமிழக ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம், ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிடக் கூடாது எனவும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தருவதுதான் ஆளுநரின் வேலை எனவும் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
