முக்கிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து..


தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என இப்புத்தாண்டில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய புத்தாண்டில், தமிழர்கள் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.