முக்கிய செய்திகள்

“தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் – டிடிவி. தினகரனுக்கும் இடையேதான் நேரடியான போட்டி இருப்பதாக பாஜகவின் செயற்பாட்டாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். எனவே தமிழர்கள் டிடிவி.தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

I learn from some BJP activists that the Chennai RK Nagar poll has narrowed to DMK vs Dinakaran. Obviously then Tamils must vote for TTVD.

— Subramanian Swamy (@Swamy39) December 18, 2017

இந்த பதிவின் கீழ் ஒருவர் , “ நீங்கள் ஏன் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்று தென்னிந்தியா முழுவதும் இந்துத்துவம் வேகமாக வளர உதவி செய்யக்கூடாது..?” என்று சுப்பிரமனியன் சுவாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “ இதுபற்றி அமித்ஷாவிடம் கேளுங்கள் “ என்று பதிலளித்தார்.