முக்கிய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அவமரியாதை : கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்..


புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் விஜயேந்திரரின் செய்கை தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டார். அவருடன் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது விஜயேந்திரர் மட்டும் எழாமல், தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார்.

விழா நிறைவடையும் போது, தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்றார். இந்நிலையில் விஜயேந்திரரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.