தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்…
என்னதான் தமிழ்..தமிழ் என்று கூவினாலும் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் குறைந்தபாடில்லை..
தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் நகர்புற பெற்றோர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்.தாய்மொழியை தன் தாய்மொழிக் காரரிடிடம் பேசாத குணம் தமிழர்களிடமே உள்ளது.
ஆனால் சிங்கப்பூர் அரசு தமிழ் மொழியை அரசு மொழியாக அறிவித்ததுடன் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவிவருகிறது.
சிங்கப்பூர் கடை ஒன்றில் தமிழில் பேசுவது அவமானம் இல்லை அடையாளம் என பலகை வைத்துள்ளது.
தமிழர்களே தமிழில் பேசுங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள். தமிழ் மொழியை அவமானப்படுத்துவது தாயை அவமானப்படுத்துவது போல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.