முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு….


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் , புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணிநேரத்தில் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். தென்மேற்கு திசையில், மணிக்கு 30 முதல் 50 கி.மீ.,வரை பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.