முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கடலின் வட பகுதியில் அகஸ்ட் 4-ம் தேதி புதியதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், ஆந்திரா, ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.