தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது.
அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், நெல்லை, மதுரை, கரூர், ஆகிய நகரங்களிலும் வெயில் சதம் அடித்தது.
சென்னையில் 101.8 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்,
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் அனல் காற்று வீசும். கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர், திருத்தணியில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.