
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்துார்,வேலுார்,இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,தர்மபுரி,கடலுார், பெரம்பலுார்,அரியலுார்,ஈரோடு,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது