தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா?: தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…

கரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தபடும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தது.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கறுகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை எனவும், இது தொடர்பாக எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் நீக்கம் ஆகியவற்றிக்காக பெறப்பட்ட ஆவணங்களை வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி வரும் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தபடும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் தமிழ் அகாடமி : டெல்லி அரசின் முடிவுக்கு மு.க. ஸ்டாலின் வரவேற்பு….

பிரதமர் மோடி முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்…

Recent Posts