தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது..
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.
இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், டெல்லியில் இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.