தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் வேலூரில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
