வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு…

அரபிக் கடலில் மாலத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கையில் மழை பெய்க்ககூடும் என கூறப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை உள்பட வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளது.

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? : ஸ்டாலின் விமர்சனம்

Recent Posts