முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு..

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

மேலும் www.annauniv.edu என்ற இணையதளத்தில் கல்லூரிகளின் முழு விவரம் மற்றும் அதன் மீதான பல்கலை.யின் நடவடிக்கையை வெளியிட்டது.

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் சரிபார்த்துக்கொள்ள அண்ணா பல்கலை. அறிவுறுத்தியுள்ளது.