முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5879 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த எண்ணிக்கை 2, 51,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7,010 பேர் குணமடைந்தனர். இன்று 99 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மேலும் 1,074 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.