தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், இன்று 1,384 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவில் இருந்தும்,

கேரளாவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள். மற்ற 1,373 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை , 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதேபோல், இன்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று கரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். தற்போது வரை 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், த மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 585 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14901 ஆகவும், இன்று மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 220 ஆகவும் அதிகரித்துள்ளது.

0-12 வயதுடையவர்களில் 1 506 பேரும், 13- 60 வயதுடையவர்களில் 23,084 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,712 பேரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.