தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று (ஜூன் 9) ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும்21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இன்று மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 36 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 34,914 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 13,219 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,21,171 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 20 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1243 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 798 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18325 ஆக அதிகரித்துள்ளது.

ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.

Recent Posts