முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டி..

தமிழகத்தில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தகவல் வந்துள்ளது.