
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.