முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,443 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் .

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,079-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,992 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது.