தமிழகத்தில் மேலும் 66 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில்“ தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மேலும் 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், சென்னையில் மட்டும் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்