தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,448- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கரோனாவில் இருந்து இதுவரை 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 489 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால் . உயிரிழந்தோர் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 63 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,466பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11,635 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 688 பேருக்கு தொற்று உறுதியானது.

சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 552 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 7,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.