முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு….

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 12,653 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மொத்தம் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கரோனாவிலிருந்து 846 பேரும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 37 நாட்களுக்குப் பிறகு இன்று ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது