தமிழகத்தில் மீண்டும் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி.,

தமிழகத்தில் பாஜக,வின் செல்வாக்கு மோசமான நிலையில் உள்ளது. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை களைவது மிகக் கடினம் என பாஜக,நன்கு அறியும்.

ஆகவே பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுக்க பாஜக முடிவெடுத்துள்ளது.

பாஜ.,வின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதம் கூறுகையில் ‘பாஜகதமிழ்நாட்டில் காலடி பதிக்க ஆயத்தமாகி வருகிறது.

இதற்கு பாமக மற்றும் தேமுதிக-வின் உதவியை நாட உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களோடு கூட்டணி வைத்தால்தான் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிய எதிர்க்க முடியும் என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது.

39 தொகுதிகளில் 37 தொகுதியை அன்றைய ஜெ., தலைமையிலான அதிமுக அனாயாசமாக வென்றது.

மீதமுள்ள இருதொகுதிகளை பாமகவும் பாஜகவும் வென்றன. தற்போது தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அதிமுக போராடி வருகிறது.

அதனால் பாஜக.,விடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறது.

பாமகவை பொருத்தவரை வெல்லும் கட்சிகளோடுதான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது.

அப்படிப்பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாஜக.,வுடன் கூட்டணி வைப்பது சந்தேகமே.

இதனை பாமக செயலாளர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திமுகவின் போட்டியை சமாளிக்க ரஜினி, கமல் ஆகிய இருவரையுமே பாஜக., ஆதரிக்கவுள்ளது. தமிழகத்தின் வடமாநிலங்களில் தேமுதிகவுக்கு ஆதரவாளர்கள் அதிகம்பேர் உள்ளனர்.

எனவே தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜ., விருப்பமாக உள்ளது என பாஜக.., செயலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? : மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

Recent Posts