தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
முதல்வர் இரங்கல்
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
புரட்சித்தலைவர் MGR அவர்கள் தலைமையில் கழகத்தில் இணைந்து பல்வேறு நிலைகளில் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தவர் துரைக்கண்ணு அவர்கள்.
அனைவரிடத்தும் அன்புடன் பழகக் கூடியவர்; தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றும் சிறப்புக்கும் உரியவர்; தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரது மறைவு அவரின் குடும்பத்தாருக்கும், எனக்கும், கழகத்திற்கும், தமிழகத்திற்கும் ஈடில்லா பேரிழப்பு!
அவர்களது பிரிவால் மீளாத் துயரில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்