தமிழ்நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையல் இந்திய வானிலை நிலையம் ஏப்ரல் -29 வரை வெப்ப அலை வீசும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.