தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.,6-ல் தொடங்குகிறது..

2020-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது.

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத் தொடர் குறைந்த பட்சம் 5 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.