முக்கிய செய்திகள்

தமிழகச் சட்டப்பேரவை செயலாளராக சீனிவாசன் நியமனம்…

தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராக இருந்த பூபதியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய செயலாளராக கே.சீனிவாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவதால் இந்த நியமனம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சட்டப்பேரவை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, கேள்விகளுக்கு பதில்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை செயலாளர்தான் செய்வார்.

கே.சீனிவாசனை செயலாளராக நியமிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.