தமிழக அமைச்சரவை முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது

முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டொ்லைட், மேகதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேகதாட்டு, ஸ்டொ்லைட் உள்ளிட்ட விவகாரங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணிக்கு முதல்வா் பழனிசாமி தலைமையில் கூடவுள்ளது.

காவிாியின் குருக்கே மேகதாட்டு பகுதியில் அணைகட்டுவதற்காக கா்நாடகா அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறந்துகொள்ளலாம் என்று தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை இன்று காலை 12 மணிக்கு கூடவுள்ளது. முதல்வா் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் மேகதாட்டு, ஸ்டொ்லைட் விவகாரங்களை கடந்து மேலும் சில விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன்படி வருகின்ற ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளா்கள் மாநாடு.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து

ஆளுநா் பன்வாரிலால் புரோகித்துக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்புவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு? (சிறப்புக்கட்டுரை)

Recent Posts