தமிழக முதல்வர் டெல்லி பயணம் : பிரதமரை சந்திப்பாரா ?..


காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வழக்கில் மே 3ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி 2ம் தேதி டெல்லி செல்ல உள்ளாா்.

காவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசு ஸ்கீம் என்ற வாா்த்தைக்கு அா்த்தம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் காவிாி நடுவா் மன்றம் உத்தரவிட்ட தீா்ப்பின் அடிப்படையில் வருகிற மே 3ம் தேதிக்குள் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படுவதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது.

தற்போது வரை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வருகிற மே 3ம் தேதி மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் வருகிற 2ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் பழனிசாமி டெல்லி செல்ல உள்ளாா்.

3ம் தேதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை நோில் சந்திக்க முதல்வா் தரப்பில் நேரம் கோரப்பட்டுள்ளது என்றும், நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில் மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழக முதல்வா் பிரதமரிடம் நேரில் கோாிக்கை விடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.