
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதார்கள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொறுத்தவரை ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தபப்ட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர் (ஒசி) – 32 வயது, அனைத்து இனைத்தைச் சாரந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை, இதர வகுப்பினைச் (ஒசி) சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் – 50 வயது மற்றும் இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் – 42 வயது வரை இருக்கலாம்
விண்ணப்பதாரக்ள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே கருதப்படுவர்
கல்வித்தகுதிநியாய விலைக் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறைமாவட்டம் Salesman Packer மொத்த காலிப்பணி இடங்கள் இணையதளம்
அரியலூர் 34 – 34
ஈரோடு 90 9 99
நீலகிரி 39 14 53
கடலூர் 152 – 152
கரூர் 67 6 73
கள்ளக்குறிச்சி 70 – 70
காஞ்சிபுரம் 35 16 51
கிருஷ்ணகிரி 117 – 117
கோயம்புத்தூர் 129 70 199
சிவகங்கை 36 – 36 Apply
செங்கல்பட்டு 97 87 184
சென்னை 33 315 348
சேலம் 152 10 162
தஞ்சாவூர் 93 21 114
தர்மபுரி 58 – 58
திண்டுக்கல் 51 12 63
திருச்சி 96 33 129
திருநெல்வேலி 54 26 80
திருப்பத்தூர் 67 – 67
திருப்பூர் 86 49 135
திருவண்ணாமலை 120 – 120
திருவள்ளூர் 75 34 109
திருவாரூர் 33 – 33
தூத்துக்குடி 72 10 82
தென்காசி 40 11 51
தேனி 41 8 49
நாகப்பட்டினம் 19 – 19
கன்னியாகுமரி 35 6 41
நாமக்கல் 97 12 109
புதுக்கோட்டை 45 7 52
பெரம்பலூர் 31 – 31
மதுரை 88 18 106
மயிலாடுதுறை 40 5 45
ராணிப்பேட்டை 32 – 32
ராமநாதபுரம் 31 13 44
விருதுநகர் 58 13 71
விழுப்புரம் 49 – 49
வேலூர் 52 21 73
விண்ணப்பக் கட்டணம்
விற்பனையாளர் (Salesman) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்றும் கட்டுநர் (Packer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.