தமிழகத்தில் புதியதாக மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,65,930-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,65,930-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 6,12,320 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,117 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,371-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1164 பேர் கரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 184429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 84,88,503 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,509 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 191 மையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 43,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,02,216 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,834 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,63,682 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,832 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக: வைகோ அறிக்கை ..

800 படத்திற்காக முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி…

Recent Posts