தமிழகத்தில் இன்று புதியதாக 447 பேருக்கு கரோனா; தொற்று உறுதியானது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் மேலும் 363 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து இன்று 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 23 நாட்களாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்
