முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு : சுகாதாரத்துறை..

தமிழகத்தில் கரோனா தொற்றால்தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 -ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மேலும் 65 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1216 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728-ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,994 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் . தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக அதிகரித்துள்ளது.