தமிழகத்தில் இன்று புதியதாக 5 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 110 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.