தமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,

கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள்: 2,10,538

தனிமை வார்டுகளில் உள்ளவர்கள்: 23,689

வென்டிலேட்டர்கள்: 3,396

தற்போதைய சேர்க்கை: 1,580

ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,684 (எதிர்மறை: 2789, நேர்மறை: 411 (டிஸ்சார்ஜ்: 7), செயல்பாட்டின் கீழ்: 484) என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 2,789 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 411 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 484 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளதாகவும் தமிழாக்கி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…

மின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா?: மோடிக்கு குஷ்பு கேள்வி

Recent Posts