முக்கிய செய்திகள்

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா?..

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்தார்.

பின்னர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போது இந்த கருத்தை பாமக முன்னெடுப்பதில்லை.

சமீபத்தில் ராமதாஸின் டெல்லி பயணம் மாநில பிரிவுக்கான கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியர் சங்கம் பாமக கட்சியாக உருவெடுத்தாலும் வட தமிழகத்தை தவிர பிறபகுதிகளில் கட்சியை வளர்க்க முடியவில்லை, இதற்கு காரணம் பாமக எப்போதும் தன் சாதியை முன்னிருத்தியதே.

கட்சி ஆட்சி கட்டிலில் ஏறி தனது மகன் அன்புமணி முதல்வராக்க இததை் தவிர பாமகவிற்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

இது போல் தென் தமிழக மக்களிடையே ஒரு குறை இருந்து வருகிறது. தொழில் சாலைகள் முதல் நகர்புற வளர்ச்சி எல்லாம் சென்னையை சுற்றியே இருப்பதால் நாம் புறக்கணிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் செந்தமிழ் நாடு என்ற பெயரில் தமிழகத்தில் புதிய மாநிலம் பிரிக்க வேண்டும் என இயக்கங்கள் மதுரையில் தோன்றின.

அரசியல் காரணங்களால் அவை முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது பாஜகவும் தமிழகத்தில் தன் செல்வாக்கை நிலை நிறுத்த மாநிலத்தை பிரிக்கும் பாமகவின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனிடையே சில சாதி சங்கங்கள் வடதமிழகம்,கொங்கு மண்டலம்,தென் தமிழகம்,டெல்டா மண்டலம் என யூனியன் பிரதேசமாக பிரித்தால் நம் சாதி அரசியல் மூலம் பதிவிகளைப் பெறலாம் என கனவு கண்ட வருகின்றன.
இந்த நிகழ்விற்கெல்லாம் முன்னோடியாக தமிழக அரசு தற்போது மாவட்டங்களின் எணணிக்கையை அதிகரித்து வருகிறது.
அரசியல் ஆதாயத்திற்காக தமிழகம் இரு மாநிலமாகவோ அல்லது 4 யூனியன் பிரதேசமாகவோ மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாமக முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மூலம் காய்களை நகர்த்தி வருகிறது. மருத்துவர் ராமதாஸின் கனவு பலிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்