தமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..

நீர் நிலைகளைப் பாதுகாத்து புரணமைப்பது குறித்தும் நீர் சேமிப்பு குறித்தும் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ராஜஸ்தானைத் சேர்ந்த தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் . அண்மையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் தன்னார்வலர்களால் புனரமைக்கப்பட்ட செட்டி கண்மாய் என்ற நீர் நிலையைக் காண வந்தார்.

அப்போது அவர் சிவகங்கை மாவட்டத்தில் ஏரி,குளம், கண்மாய் என முன்னோர்களால் அசாத்தியமான நீர் நிலைகளையும் அதன் நீர் வருத்துக்கான கால்வாய்களையும் திறம்பட அமைத்து நீர் மேலாண்மை மகத்துவத்தை நமக்கு புரிய வைத்துள்ளனர். ஆனால் நாம் நீர் வரும் கால்வாய்களை ஆக்கிரமத்து நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வருவதை தடுத்து விட்டோம். மேலும் மண்ணில் உள்ள நீர்ச்சத்தை அதிகம் உறுஞ்சும் யூக்கலிப்டஸ் மரங்களை வனத்துறையே வளர்ப்பது அதை விட மனவேதனை என்றார்.

அரசு குடிமராமத்து மூலம் நீர் நிலைகளையும்,நீர் வரத்திற்கான வாய்க்கால்களையும் புனரமைக்க வலியுறுத்தினார்..

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத் தாளில் பிழைகளுடன் இடம்பெற்ற 49 கேள்விகள்: மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரிக்கை..

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்..

Recent Posts